ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தியுள்ளனர்.

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்பின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கிரீன்லாந்தில் பேரணி நடத்தியுள்ளனர்.

ஆர்டிக் தீவு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு நடந்து சென்ற போராட்டக்காரர்கள் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

Similar Posts