மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக தனிநபர்களைக் கைது செய்வதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்: மக்கள் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி, சட்ட அமுல்படுத்தல் நிறுவனங்கள், குறிப்பாக பொலிஸாருக்கு, அரசாங்கத்தின் எந்த அழுத்தங்களும் இல்லை .
சில சட்ட அதிகாரிகள், முந்தைய அரசுகளின் தலையீட்டை தவிர்க்க வழக்குகளை தங்களிடம் வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அவர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக செய்ய முடிகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் குறுகிய காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், சில எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கான அடிப்படை கொள்கை திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.