ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மகாநகர சபை கட்டளைச் சட்டம் 252 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன் பத்தி (b) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரத்னவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 27 மகா நகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும 274 பிரதேசிய சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.