இலங்கை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வுகளை நடத்துவதற்காக USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
இது அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தை வீணடிப்பதாக டிரம்ப் நிர்வாகம் வர்ணித்திருந்தது.
USAID என்பது உலகம் முழுவதும் நலன்புரி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு பெரிய சுயாதீன நிறுவனமாகும்.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், அண்மையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் திரும்ப அழைக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொண்ட USAID-ல் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை 294 ஆகக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளாக USAID திட்டத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கையை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.
அறிக்கையின்படி, இந்த நிதியின் கீழ் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய செலவினங்களில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதக் குழுவிற்கு உணவு வழங்குதல் மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கு நிதியளித்தல் ஆகியவை அடங்கும்.
அத்தகைய ஒரு திட்டத்தில், பாலின அடிப்படையிலான மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இலங்கை ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்காக 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தலை குறிக்கும் MEND திட்டத்தின் கீழ், பாலினம் மற்றும் LGBTQ தொடர்பான தலைப்புகளில் ஊடகவிலாளர்களுகாக சில வாரங்களாக சுமார் நான்கு செயலமர்வுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2017 முதல் 2023 வரை நடந்த இந்த திட்டம், டிரம்ப் நிர்வாகத்தால் ஒரு வினோதமான திட்டமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக மாறியுள்ள கோடீஸ்வரரான எலோன் மஸ்க், இந்த திட்டங்களை அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Popular
© 2025 | MM Media Network (Pvt) Ltd. All Rights Reserved.