துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (04) பிற்பகல் மட்டக்குளிய – கந்திரானவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போது, அவரிடம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கடுவெல, மேல் போமிரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை முயற்சி தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.