மீகொட பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, தலங்கமவில் சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து சிறியரக பஸ்ஸொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



