குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று (05) அதிகாலை 1 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து நாட்டிற்கு சந்தேக நபரின் பொருட்களை பரிசோதித்தபோது உணவுப் பொதிகளில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான 5 கிலோ 2 கிராம் குஷ் ரக போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளடன் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருட்களுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.