உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) உத்தேச சட்டமூலம் குறித்த தனது முடிவை உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் நீதியரசர் குழாம் வெவ்வேறான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மையால் மட்டுமே பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் நீதியரசர்கள் இருவர் தீர்ப்பளித்தனர். அதே நேரத்தில் ஒரு நீதியரசர் அதை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தீர்ப்பளித்துள்ளார்.