இலங்கை
இலங்கையில் நிலையான எரிசக்தி முதலீடுகளை ஆராயும் ஆஸ்திரேலிய நிறுவனம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலையான எரிசக்தி தீர்வுகள் நிறுவனமான 365 பியூச்சர் எனர்ஜி, இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இசுரு யாப்பா, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எரிசக்தி தொழில்நுட்ப தொழில்முனைவோர் லுடோவிகோ ஃபினோட்டோவுடன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையின் எரிசக்தி துறையில் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கும், பசுமை பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.