Thamil360
இந்தியா

டிரம்ப் மகள் இவான்காவை கொல்ல ஈரான் பயங்கரவாதி சதி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்காவை கொல்ல ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையால் பயிற்சி பெற்ற பயங்கரவாதி சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இவான்காவை கொல்ல அந்த பயங்கரவாதி சபதம் செய்திருந்தான். முகமது பாகர் என்ற அந்த பயங்கரவாதி சமீபத்தில் துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இந்த சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Source