இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை, சர்வதேச நாணய நிதியத்தின் அளவுருக்களுக்கு எவ்வாறான வழிமுறைகளினூடாக சாதகத் தன்மையை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பிலான மூன்றாவது மீளாய்வுக்கு அனுமதி கிடைத்தால் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அடைவதற்காக இலங்கையால் உள்நுழையக் கூடியதாக இருக்கும். அதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 03 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான விரிவாக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தினூடாக இலங்கைக்கு கிடைக்கும் நிதித்தொகை 1,333 மில்லியன் டொலர் வரை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதிய பணிக்குழாம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியினூடாக (ETT) ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்து பொருளாதார கொள்கை தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 333 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் அடுத்த தவணையில் இலங்கைக்கு விடுவிப்பதற்கு அதன்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தினால் இந்த மீளாய்வுக்கு அனுமதி வழங்கவும் அதன் பின்னர் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவினால் அதற்கு அனுமதியளிக்கவும் வேண்டியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்ட யோசனை நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவே நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இதற்கு அனுமதி வழங்குவதற்கு காலதாமதத்தை ஏற்படுத்தி வந்தது. அதன்போது 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
அதில் “பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுதல் மற்றும் கடன் நிலைபேறுதன்மையை மீண்டும் அடைவதற்கு இலங்கையின் செழிப்பை பாதுகாப்பது அவசியம் என்பதுடன், பொறுப்புடன் அரச நிதி கொள்கையை செயற்படுத்த வேண்டும். நாணய நிதிய வேலைத்திட்டத்தின் நோக்கெல்லைக்கு அமைய 2025ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக தொடர்ச்சியாக அரச வருமானத்தை சேகரிப்பதற்கான முயற்சி மற்றும் செலவை மட்டுப்படுத்துவது அவசியமாகும்.
வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் வரி சதவீதத்தை மேம்படுத்துதலுக்கான முயற்சியில் ஏற்படும் சிக்கல் வரி செலுத்துபவர்களுக்கு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை சமமாக பிரித்து விநியோகத்தை உறுதிபடுத்துவதற்கு அதிகபட்ச முயற்சியை எடுத்தல் வேண்டும்.
புதிய வரிகளை விடுவிப்பதை தவிர்த்துக்கொள்வதனூடாக வருமான இழப்பு மற்றும் ஊழலை குறைப்பதற்கும் சமூக செலவு உள்ளிட்ட செலவுகளுக்கு அவசியமாக அரச நிதி பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கும் இலங்கையின் மிகவும் எச்சரிக்கை நிறைந்த குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உதவியாக இருக்கும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.