சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்தவும், நீண்ட தூர ரயில் சேவைகளை ஏற்படுத்தவும், ரயில்வே திணைக்களம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், ரயில் சேவைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதை முன்னிட்டு புதிய சேவைகள் அறிமுகமாகவுள்ளன என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
புதிய ரயில் சேவைகள்:
- எல்ல ஒடிஸி – கண்டி
பெப்ரவரி 1ஆம் திகதி முதல் வார இறுதிகளில் கண்டி மற்றும் தெமோதரா இடையில் இயக்கப்படும். - எல்ல ஒடிஸி – நானுஓயா
பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளை இடையே சேவை செய்யப்படும். - எல்ல ஒடிஸி – கொழும்பு
கொழும்பிலிருந்து மேலதிக பயணங்கள் பெப்ரவரி 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும், பதுளாவில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும். - கொழும்பு – காங்கேசன்துறை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை
ஜனவரி 31ஆம் திகதி முதல் தினசரி சேவையில் இணைக்கப்படும்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.