வீதி பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இலங்கை பொலிஸ் திணைக்களம் வேகத் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் திணைக்கள கண்காணிப்பாளர் (SSP) மனோஜ் ரணகல, இரவு நேர நடவடிக்கைகளின் போதும் இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வேகத் துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை எனவும் 1.2 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிந்து, வாகனத்தின் வேகம், ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் உரிமத் தகடு எண் போன்ற அத்தியாவசியத் தரவுகளைப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆதாரமாக வழங்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிகளில் 35 சாதனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 15 சாதனங்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு சாதனமும் அரசாங்கத்திற்கு 3.3 மில்லியன் ரூபா செலவாகிறது.
நாட்டில் போக்குவரத்து விபத்துகளுக்கு அதிக வேகம் ஒரு முக்கிய காரணம் என்றும், இதன் விளைவாக தினமும் 8 முதல் 10 பேர் உயிரிழப்பதால் இந்தப் பிரச்சினையைத் தணிப்பதற்கும், அனைவருக்கும் பாதுகாப்பான வீதிகளை உறுதி செய்வதற்கும் இந்த வேகத் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்துவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.