இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (22) இரவு மன்னார் கடலில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது மீன்பிடிக்கு பயன்படுத்திய 5 படகுகளையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.