புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் பரிந்துரை

Date:

புதிய தூதுவர் ஒருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு வியாழக்கிழமை (27) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது.

அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வை.கே.குணசேகரவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், பஹ்ரெய்ன் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக திருமதி.எஸ்.எஸ்.திசாநாயக்கவின் பெயரும் உயர் பதவிகள் பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, ஹினிதும சுனில் செனவி, குமார ஜயக்கொடி, பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...