முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கின் தலைமையில் இன்று (30) பிற்பகல், விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடல், எதிர்கால அரசியல் நிலவரங்களைப்பற்றிய முக்கியமான அம்சங்களை ஆராயும் வகையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.