சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது

Date:

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மாணிக்ககல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.


நன்றி – க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...