ஐஸ்கிரீம் ஆசையால் அதிர்ச்சி

தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி வடிவிலுள்ள ஐஸ் ஒன்றை வாங்கி, அதனது பையைப்பிரித்த போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.

இதைப் பார்த்தவர் பதறிப் போனார். பின்னர் அதை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts