விறகு ஏற்றிச் சென்ற பாடசாலை மாணவர் பலி

Date:

விறகு ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் பாடசாலை மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் பிரதேசத்திற்குட்பட்ட மஹகும்புக்கடை செம்புகுளிய பிரதேசத்தில் வசிக்கும் 7ஆம் தரத்தில் கல்வி கற்ற சமிது வினோத் என்ற 12 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவனின் தந்தை லொறிகளுக்கு விறகு விநியோகம் செய்பவராக இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் ஏனைய இளைஞர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...