லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் இறுதி அஞ்சலி

Date:

அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்களினது இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாரது இந்த கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கொலை கலாச்சாரம் சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் வாக்குகளால். தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாச்சாரத்தின் மற்றொரு அங்கமாகும். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது.

இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாச்சாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும், ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது கொலை குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...