கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புனித தந்ததாது நினைவுச்சின்னத்தின் கண்காட்சிக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் கண்காட்சி ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சிக்கான திகதிகளை மல்வத்துமற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களும், தியவதன நிலமேவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஆரம்ப முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் முன்வைத்திருந்தார்.
புனித தந்ததாது நினைவுச்சின்னத்தின் கண்காட்சியானது 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.