ஓய்வுப்பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை

ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தலங்கம பகுதியிலுள்ள அவரது வீட்டில் இன்று (12) கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

முன்னர் அரச அச்சுத்துறையில் பணியாற்றியவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோத்தகராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரது வீட்டின் மேல் தளம் பல தனி நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அசாதாரண சத்தம் கேட்டதும் வாடகைக்கு இருந்தவர்கள் கீழே ஓடி வந்துள்ளனர்.

ஆனால், வீட்டு உரிமையாளரின் உடல் மட்டுமே கிடந்துள்ளது.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Similar Posts