ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் – சந்தேக நபருக்குப் பிணை
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (03) கல்கிசை மேலதிக நீதவான் ஹேமாலி ஹல்பந்தேனிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.