2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) அடிப்படையில் மேற்பரப்பு பணவீக்கம், பணவீக்க இலக்குகளை விட குறைவாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை நிதி அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாணயக் கொள்கை கட்டமைப்பில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்குகளை இரு தொடர்ந்த காலாண்டுகளுக்குள் சந்திக்க முடியாவிட்டால், நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் கொழும்பில் மேற்பரப்பு பணவீக்கம் முறையே 1.4% மற்றும் 0.8% ஆக இருந்ததாக மத்திய வங்கி கூறுகிறது.
இதன் பின்னர், பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த அறிக்கையை பாராளுமன்ற நிதிக்குழுவில் சமர்ப்பித்து கலந்துரையாடியதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.