புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கார் சாரதியான பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாரவில பதில் நீதவான் சமன்பலி அமரசிங்க முன்னிலையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து.
இந்த விபத்து தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் நேற்று விடுவிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற விசேட அமர்விற்கு வந்து கொண்டிருந்த போது, வென்னப்புவ – கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.
வென்னப்புவ – பதவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.