எல்பிட்டிய பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 15,000 கிலோ கச்சா அரிசியை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், நுகர்வோர் கட்டுப்பாட்டு விலையான ரூ.220க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லுணுகம்வெஹர பிரதேசத்தில் இருந்து கச்சா அரிசி அதிக விலைக்கு கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், எல்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
லொறியின் 400 மூட்டைகளில், 15,000 கிலோ கச்சா அரிசி இருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட அரிசி அருகிலுள்ள கடை முன்பாக விற்பனைக்கு வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையை நுகர்வோர் அதிகாரசபையின் தென் மாகாண உதவிப் பணிப்பாளர் கபில பண்டார, காலி மாவட்ட பிரதானி பீ. கொடகம, மற்றும் விசாரணை அதிகாரி சஜித் ரங்கெந்தமுல ஆகியோர் முன்னெடுத்தனர்.