அமெரிக்க அரச நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்தும் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் திங்கட்கிழமை (17) வொஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ட்ரம்புக்கும் மஸ்க்கிற்கும் எதிராக குரல் எழுப்பியதோடு எலான் மஸ்க்கை உடனடியாக அரச துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரச செயல்திறன் துறைக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக மட்டுமே எலான் மஸ்க் செயற்படுவதாகவும், அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் திங்கட்கிழமை (17) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.