பொதுமன்னிப்பில் 49 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) சிறையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னி வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் கழித்த ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு வார கால பொது மன்னிப்பு இதன்கீழ் வழங்கப்படுகிறது.

75,000 ரூபாவுக்கு குறைந்த அபராதத்தைச் செலுத்தத் தவறியமையினால் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை இரத்துச் செய்தல் இந்த பொதுமன்னிப்பின் கீழ் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Similar Posts