மின்சாரக் கட்டணங்களுக்கு நிலையான விலையை வழங்கும் புதிய திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பராமரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சில ஆண்டுகளில் செலவுகளை குறைத்து நிலையான விலையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிக முயற்சிகளை மேற்கொள்வதாகவும், இது வழமையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை ஜனாதிபதி கொழும்பில் நடைபெற்ற ஏற்றுமதி விருது விழாவில் பங்கேற்ற போது தெரிவித்தார்.