ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்வதுடன், பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்க உள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் நேரடியாக அவதானம் செலுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.