அவசரகால சட்டம் அடக்குமுறைக்கு அல்ல : ஜனாதிபதி உரை

Date:

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார்.

நிதி அமைச்சு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசர காலசட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அவர் பல கருத்துக்களை முன்வைத்த நிலையில்,

அவசர காலதடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை நாம் அடக்குமுறையாக பிரயோகிக்கவில்லை என தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் எமது அன்பான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அத்துடன் உயிரிழந்தவர்களை மீளக் கொண்டு வர முடியாது என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஒரு சிறந்த தேசத்தை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

தற்போதைய அனர்த்த நிலைமை நாட்டை ஒன்றிணைத்துள்ளது என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்வதற்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அனர்த்த நிலைமையின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், கடமையின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்.

அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாரிய அர்ப்பணிப்பகளை மேற்கொண்ட முப்படையினருக்கு நன்றிகளைகளையும் பாராட்டையும் அவர் தெரிவித்தார்.

கலா ஓயாவில் இடம்பெற்ற பஸ் அனர்த்தத்தில் இருந்து 67 பேரை பாதுகாப்பாக மீட்க கடும் முயற்சி செய்திருந்தமையும் சுட்டிக்காட்டதக்கது.

தொடர் சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஆனால் சிலர் நிமைலமையை புரிந்து கொள்ளாது பேஸ்புக்கில் மக்களை தவறாக வழிநடத்தும் விதமாக பதிவுகளை போட்டிருந்தார்கள் எனவும்அவர் சுட்டிக்காட்டினார்.

விமானப்படைவீரர் தன்னுடைய உயிரையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு 25000 ரூபா , அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50,000 ரூபா, வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி 2026இல் விதிக்கப்படாது என்றும், 2027 இல் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், இது IMF க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...