முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்,

இவ்வாறு குறைந்த விலைகளால் பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அதனுடன், கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Similar Posts