கனேமுல்ல சஞ்சீவ கொலையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பிலிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனடிப்படையில், குறித்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்