டொரண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 80 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்த 80 பேரில் யாரும் உயிரிழக்கவில்லை, ஆனால் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
குறித்த விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸில் இருந்து மினசோட்டாவுக்கு வந்துள்ளது.
அதிக காற்று மற்றும் பனிப்புயல் காரணமாக இந்த விபத்துக்கு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.