வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் கொண்டு வந்த 38,800 சிகரெட்டுகள் அடங்கிய 179 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 53 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பயணி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கொண்டு வந்த சிகரெட் தொகை எதிர்வரும் 5ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.