ஒஸ்கர் விருதுபெற்ற அனோரா படத்தின் இயக்குநர் தன் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான 97ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டொல்பி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சிறந்த திரைக்கதைஇ படத்தொகுப்புஇ இயக்குநர்இ நடிகைஇ திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்தது.
சிறந்த இயக்குநர்இ திரைக்கதைஇ படத்தொகுப்புஇ சிறந்த திரைப்படம் என 4பிரிவுகளிலும் இயக்குநர் ஷான் பேகர் 4 ஒஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
விருது வென்ற பின் பேசிய ஷான் பேகர் தெரிவிக்கையில:
“ஐந்து வயதில் என் அம்மா எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தினார். இன்று அவரின் பிறந்த நாளில் ஒஸ்கர் விருதைப் பெறுகிறேன்.
சுயாதீன படமான அனோராவுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சினிமா படைப்பாளிகள் பெரிய திரைகளுக்கான படங்களை உருவாக்குங்கள். அதுஇ என்னால் முடிந்திருக்கிறது.
இடைபட்ட காலங்களில் தங்கள் கதைகளையும் வாழ்க்கையையும் என்னிடம் பகிர்ந்த பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி சொல்கிறேன். மிகுந்த மரியாதையுடன் இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
பாலியல் தொழிலாளர்களும் காதல் உள்பட பல உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதையே அனோரா பேசுகிறது. இந்த நேரத்தில்இ பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
பெண் பாலியல் தொழிலாளியான நாயகிக்கு வரும் காதலை மையப்படுத்தியே அனோரா திரைப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது