இன்றைய தினம் (18) பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விடயங்களை பற்றி ஆராய்வதற்கு என தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.
இதில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைத் தொய்வின்றி நிறைவேற்றும் வகையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம், குறிப்பாக வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது. வேட்பாளர் பெயரிடல் மற்றும் பிரசார செயல்முறைகள் பாராளுமன்ற விடையங்களை பாதிக்கக் கூடும் என்ற வகையில் எமது கோரிக்கைகள் காணப்பட்டது.

அதிகாரத்தில் உள்ள தற்போதைய அரசனது தனது பிரபலத்துவம் குறைவதற்கு முன் தேர்தலை நடத்த விரும்புவதைப் போல் தெரிகின்றது.
அரசாங்கம் எதிர்கொள்ளக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினை ஏப்ரல் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் நேரம். இது தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரச தோல்வியை அம்பலப்படுத்தக்கூடும், இது அதன் வாக்காளர் தளத்தில் பெரும் பகுதியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், அரசின் அழுத்தத்திற்கு பணியாது, இலங்கைத் தேர்தல் ஆணையம் தனது சுயாதீனத்தையும் நம்பகத்தன்மையை பேண வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.