பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

Date:

பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிறுமிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் துஷ்பிரயோகம், பலாத்காரம் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்து ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகளைப் பார்க்கிறோம்.

சமீபத்திய சம்பவங்களாக அனுராதபுரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையும், கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிடலாம். இதற்கு மேலதிகமாக நாளாந்த பத்திரிகைகளை வாசிக்கும் போது வேறு பல சம்பவங்களையும் காணலாம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, சம்பிரதாய முறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வதற்குப் பதிலாக, உடனடியாக செயல்பட்டு, துஷ்பிரயோகம் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான பொறிமுறையை தாபிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) சபையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரிடமும், கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது கொள்கை வகுப்பாளர்களாகிய நமது பொறுப்பாகும் என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...