தற்போதைய அரசாங்கம் மேலதிக வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்

Date:

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருந்தேனும் சரியான வறுமை ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கத்தால் அடையாளம் காண முடியாது போயுள்ளது. கொள்ளை, ஊழல், சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கும் பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளன. குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் முதல் முதியோர்கள் வரை என சமூகத்தில் சகலரும் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

பாதாள உலகக் கும்பல் அல்லது போதைப்பொருள் காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, கொலை செய்யும் அளவுக்கு இந்த கொலைகாரர்களுக்கு அச்சமும் பயமும் அற்றுப்போவது எங்ஙகனம்? என்பதில் பிரச்சினை காணப்படுகிறது. சட்டம் கோலோச்சுமாக இருந்தால், நீதி நிலைநாட்டப்படுமாக இருந்தால், குற்றவாளிகள் குற்றம் செய்ய பயப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகள், கற்பழிப்புகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், கொள்ளைகள், குற்றச்செயல்கள் போன்றவற்றை இச்சமூகத்தில் நடத்தும் குழுக்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொடூரம் தலைவிரித்தாடும், கொலைக் கலாசாரம் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.

இதுபோன்ற கொலைக் கும்பல்கள் சுதந்திரமாக உலவும் வரை, நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியாது என்பதில் சந்தேகமில்லை.

கொலைகாரர்கள் மக்களின் சுதந்திரத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், நாட்டில் நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகபட்ச ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மிகவும் புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இன்று நாட்டில் மக்கள் நம்பிக்கையிழந்தும், விரக்தியடைந்தும் போயுள்ளனர். சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் காணப்பட்டது.

பெருந்தோட்டக் கைத்தொழில், விவசாய உற்பத்தி, சுயதொழில் துறை உட்பட சமூகத்தின் சகல பிரிவினருக்கும் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்தினர். இன்று மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பல இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கை முன்னெடுத்து வருகின்றனர். வாழ்க்கைச் சுமையால் தாங்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று நாட்டு மக்கள் பெரும் வாழ்க்கைச் சுமையால் அவதிப்பட்டு வருவதுடன், வாழ்க்கைச் சுமை அதிகரிக்க அதிகரிக்க, மக்கள் பெரும் பீடனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையிலிருந்து விடுபட மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இதற்கு ஏற்றுமதி உற்பத்தியை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும். பயன்படுத்தப்படாத தரிசு நிலத்தை வேலையில்லாத இளைஞர்களுக்கும், லயன் அறைகளில் வசிப்போருக்கும் வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக அவர்களை வலுப்படுத்த வேண்டும்.

இந்த பணிகளை நிறைவேற்ற இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் தெளிவான திட்டமும் இந்த அரசிடம் இல்லை. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மக்களிடம் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி வருவகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...