பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்

Date:

எனது நாட்டுப் பெண்கள் சமூக மட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் சூழலில், குறிகாட்டிகளைப் பார்க்கும் போது, ​​எமது நாட்டுப் பெண்கள் ஊழியர் படையணியில் குறைந்த பங்கேற்பையே ஆற்றி வருகின்றனர். இது 34% ஆக அமைந்து காணப்படுகின்றன.

வளர்முக நாடுகளில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு 46% க்கும் அதிகமாக காணப்படுகின்றன. வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன் என்பதை ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மை பெண்களாக இருந்தாலும், ஆண்களை மையமாகக் கொண்ட குடும்ப ஒழுங்குகளும், கட்டமைப்புகளுமே இன்று நாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஆண்களை மையமாகக் கொண்ட குடும்ப கட்டமைப்பில், பெண்களின் பக்கம் பல சமயங்களில் சுயமாக வெளிவருதற்கான வாய்ப்பு குறைந்த மட்டத்திலயே காணப்படுகின்றன.

பல சமயங்களில், எமது நாட்டில் பெண்கள் அசாதாரண சூழ்நிலைகளின் போதும், வீடுகளிலும், பணியிடங்களிலும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில், இதுபோன்ற ஒரு நாளில், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், பாராபட்சங்களையும் அடையாளம் கண்டு, கால அட்டவணையுடன் இந்த அநீதிகளை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். சிவில் சமூகமும் அரசாங்கமும் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான லக்வனிதா அபிமானி விருது வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...