மெதகம பகுதியில் உள்ள மாகல்லகம பிரதேசத்தில் 1 வயது 2 மாதங்கள் நிரம்பிய குழந்தை வீட்டு முன்பாக இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இந்த சோகம் சனிக்கிழமை (01)மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தை தாயுடன் வீட்டில் இருந்த போது, தாய் உறங்கிக் கொண்டிருக்கும்போது குழந்தை தவறி கிணற்றில் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடல் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.