ஒரே நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மட்டும் 24 மணி நேர சேவை செயல்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது.
இதற்காக வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பதிவு செய்யலாம் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.