நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டிகள்

Date:

க.கிஷாந்தன்

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி 13.03.2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்கல் 5.00 மணிவரை நடைபெற்றது.

நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் இல்ல விளையாட்டு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் பி.முத்துலிங்கம் தலைமையிலும் உடற் கல்வி ஆசிரியர் எஸ்.ஸ்ரீகுமார் வழிகாட்டலிலும் நடைபெற்றதுடன் இந்நிகழ்விற்கு ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துக் சிறப்பித்தார்.

இந்த விளையாட்டு போட்டியில் ஆண் பெண் இருபாலாருக்குமான 100மீற்றர், 200மீற்றர் மற்றும் அஞ்சல் ஓட்ட போட்டிகள் நடைபெற்றதுடன் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான போட்டிகளுடன் விநோத உடை போட்டிகள், உடற் பயிற்சி கண்காட்சி மற்றும் மாணவர்களின் அணிநடையும் இடம் பெற்றது.

இந்த இல்ல விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை வளவை இல்லமும் இரண்டாம் இடத்தை களனி இல்லமும் மூன்றாம் இடத்தை மகாவலி இல்லமும் பெற்றக் கொண்டது.

இவ்விளையாட்டுக் போட்டிக்கு கோட்டம் இரண்டின் கோட்டக் கல்வி பணிப்பளார் உட்பட்ட கல்வி புலத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அதிகளவானோர் கலந்து சிற்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...