இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.

இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...