அரச சார் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இவ் வருட வரவு செலவு திட்ட அறிக்கையின் போது கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கருத்து பலரால் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆனால் அரசானது பல திட்டங்களை கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கு உள்ளது எனவும் அவ் திட்டங்கள் தொடர்பாகவும் ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பாகவும் விவரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வியாழக்கிழமை (20) நடைபெற்ற பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கப்படவில்லை, இதன் போது எனக்கு எழுந்த கேள்வியாது இவ் திட்டங்களில் அநேகமான திட்டங்கள் இந்திய அரசினால் கிழக்குக்கு என ஒதுக்கப்பட்ட திட்டங்களாகும்.
நாம் பல தடவைகள் நான் உட்பட கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வட மாகாணம் போன்று கிழக்குக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என பல தடவைகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய அரசினால் கிழக்குக்கு என வழங்கப்பட்ட திட்டங்களாகும்.
அதனடிப்படையில் இவ் நிதியானது யாரால் ஒதுக்கப்பட்டது. இவ் அரசின் பாதீட்டின் போது ஒதுக்கப்பட்டதா அல்லது இந்திய அரசின் மூலம் ஒதுக்கப்பட்டதா என்பது எனது கேள்வியாக இருந்தது.
அரசானது பாதீட்டில் கிழக்கு மக்களுக்கு போதுமான திட்டங்களுக்கான பனம் ஒதுக்கவில்லை என்பது நிதர்சனம். என தெரிவித்தார்.