ஊழியர் சேமலாப நிதி கீழ் அங்கதவர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் எச். கே.கே. ஏ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய முறையை பின்பற்ற, 011- 2201 201 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி, எந்தவொரு கடினத்தையும் சந்திக்காமல், விருப்பமான திகதி மற்றும் நேரத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதேபோன்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.