பாராளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் 3 தெரிவு

Date:

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1)இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அஜித் கிஹான் ஆகியோரினால் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இங்கு வேறொருவரினதும் பெயர் பரிந்துரைக்கப்படாமையால் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்க குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதுடன், தன்னைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் பொது மனுக்களைத் தாக்கல் செய்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொதுமனு விசாரணை செயன்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

அதேநேரம், பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும கடந்த 24ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வழிவகைகள் பற்றிய குழு முதன் முதலாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெருமவின் பெயரை முறையே பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் மாபலகம மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

இங்கு உரையாற்றிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், குழுவின் பணிகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும், இதற்கு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற குழு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு கடந்த 24ஆம் திகதி முதன் முதலாகக் கூடியது. இதில் அமைச்சர் கிரிஷாந்த அபேசேன அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான சிங்கள பாடகர் 'ஷான் புதா' உள்ளிட்ட...

கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவிப்பு

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி...