ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

Date:

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இந்நியமணக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன அவர்களும், அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார அவர்களும், புத்தளம் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களும், காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களும், கம்பஹா மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களும், குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களும், களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமணங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் பிரசன்னமாகி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...