பிரபஞ்சம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்

Date:

அமெரிக்காவிற்கு சொந்தமல்லாத நிறுவனங்களை மையமாகக் கொண்ட புதிய AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. deepseak என அழைப்படும் இது chatgpt யை முறியடித்துள்ளது. சிலிக்கான் வேலி போன்ற மென்பொருள் பொறியியலாளர்களின் சொர்க்க பூமியாக எமது நாட்டை உருவாக்க வேண்டும். புதிய உலக உலகிற்கு ஏற்றாற் போல் புதிய கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தேசமாக எமது தேசத்தையும் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாத அபிமான 24 நிகழ்வில் நேற்றைய தினம் (09) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நான் இதற்கு முன்னர் பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைத் தொகுதிகளை அன்பளிப்புச் செய்தேன். மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் கைவிடப்படவில்லை. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அதனை மீண்டும் ஆரம்பிப்பேன். கட்சி பேதமின்றி, ஆளுந்தரப்பையும் எதிர்த்தரப்பையும் ஒன்றிணைத்துக் கொண்டு இதனை முன்னெடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இந்த கல்லூரியை முன்மாதிரி கல்லூரியாக மாற்றியமைக்க முடியும். உலகை வெல்லும் புதிய தொழில்நுட்பமான தகவல் தொழில்நுட்பம் சகல பாடசாலைகளிலும் அமைந்து காணப்பட வேண்டும். இதை அரசாங்கத்தால் மாத்திரம் செய்து முடிக்க முடியாது. அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதிநவீன உபகரணங்களை பாடசாலைக் கட்டமைப்பிற்கு வழங்க வேண்டும். புதிய தொழில்நுட்ப முறைமைகளை பாடசாலை கட்டமைப்பிற்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான சிங்கள பாடகர் 'ஷான் புதா' உள்ளிட்ட...

கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவிப்பு

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி...