நாடளாவிய ரீதியில் 585 சந்தேக நபர்கள் கைது
போதைப்பொருளை அழிக்கும் நோக்கில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 585 சந்தேக நபரகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (13) மொத்தம் 29,367 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் நேரடியாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் திறந்த பிடியாணையுள்ள 142 சந்தேக நபர்களும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்தியதற்காக 352 பேரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 91 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4318 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.